December 13, 2025
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்!!
புதிய செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்!!

Jun 4, 2024

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை தற்போது லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது 4,115 ரூபாய்க்கு விற்கப்படும் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாய் எனவும்,

5 கிலோ எடை கொண்ட   எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை  1,582 ரூபாய் எனவும்,

2.3கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 740 ரூபா என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *