ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி, பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகன்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்நிலையில் இவர் தற்போது பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதுடன் பிரதர் திரைப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்குவதோடு, ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிக்கிறது, மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசைமையத்துள்ளார்.
இத் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இன்று நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று காலை 11.11க்கு படக்குழு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.