இன்று (22.07) முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் வலய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், தர வட்டங்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கமைய எதிர்வரும் பதினைந்து நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், அனைத்து வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








