மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
ரிஷபம்
ஆடை ஆபரணம் வந்து சேரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
மிதுனம்
மற்றவர்களால் பயனடைவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் வரவு உயரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்
உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்
திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி
உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.
துலாம்
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.
தனுசு
எதிர்காலம் பற்றிய வீண் டென்ஷன் வந்து செல்லும். வாகனம் பழுதாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
மகரம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். மதிப்பு கூடும் நாள்.
கும்பம்
உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.
மீனம்
புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.