மேஷம்
மனதில் எண்ணியவை நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம்
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்பத்தில் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. நிதானம் வேண்டிய நாள்.
மிதுனம்
மனதில் உள்ள கவலைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களுடன் ஒற்றுமை மேம்படும். வெளியூர் தொடர்பான விடயம் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் அனுகூலமாக முடியும் நாள்.
கடகம்
அரசு சார்ந்த பணிகளில் நன்மை ஏற்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். வாகனத்தில் செல்லும் போது கவனமகச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
சிம்மம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் தேவை. வீடு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும்.
கன்னி
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். மனதில் அடிக்கடி குழப்பம், ஏற்படக்கூடும். பண வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.
துலாம்
உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
விருச்சிகம்
நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூடியவைரை இன்று புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம்.
தனுசு
மனதில் புதுவித சிந்தனை உண்டாகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பணியில் கவனம் தேவை. மற்றவர்களின் கருத்துகளில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். மனதில் உற்சகமும் செயல்களில் பரபரப்பும் கணப்படும்.
மகரம்
வியாபாரத்தில் லாபம் உண்டகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய முயற்சி சாதகமக முடியும். அனுகூலம் உண்டகும் நாள்.
கும்பம்
புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
மீனம்
துணிச்சலாகச் செய்ற்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்மாமன் வழியில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து சுபச்செய்தி கிடைக்கும்.