தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடியும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையும் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
இதற்கமைய காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் எனவும் ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.