November 17, 2025
இன்றைய வானிலை குறித்த எச்சரிக்கை!!!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இன்றைய வானிலை குறித்த எச்சரிக்கை!!!

May 29, 2024

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து  காணப்படுவதனால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையும் மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின்  சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மேலும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்திலும் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும்.

ஆகவே நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *