இலங்கையில்ம் தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர்அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.