இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஒரு post இல் 10 புகைப்படங்கள் வீதம் பதிவிடலாம் என்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள புது அப்டேட்டில் 20 ஸ்லைட் புகைப்படங்கள் சேர்க்கும் வசதி வந்துள்ளது.
கதையை காட்சி மூலம் கூறும், இன்ஸ்டா காட்சிகளை அதிகப்படுத்தி, கதை கூறுவதற்கான புகைப்படங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம், இன்ஸ்டா உபயோகிப்பவர்களின் திறனை வெளிக்கொணர்வதோடு, தனித்துவமான புகைப்படத் தொகுப்பையும் உருவாக்கும்.
அதுமட்டுமின்றி உங்கள் ஸ்லைட்களுடன் பாடல்களையும் இணைக்கலாம்.
இன்ஸ்டா உபயோகிப்பவர்களுக்கு இதுவொரு சூப்பர் அப்டேட்டாக இருக்கும்.