உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்டோருக்கு இன்றைய தினம் (22) இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த மௌன அஞ்சலியானது சபையின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் (Prasanna Ranatunge) முன்மொழியப்பட்டுள்ளது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பயணித்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.
மேலும், அவருடன் பயணித்த ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்டவர்களும் விபத்தில் பலியாகியிருந்தனர்.
அதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இப்ராஹிம் ரைசி, உமா ஓய திட்டத்தை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.