அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
கடலை மாவு, 3-5 தூளி தேன் கலந்து முகத்தில் கரும்புள்ளி உள்ள இடத்தில் பூசிவர கரும்புள்ளி மறையும். முழங்கை, மற்றும் முழங்காலில் பூசலாம் நல்ல பலன் தரும்.
பச்சை பயிறு மாவு, சிறிது பால், தேன், பண்ணீர் நீர் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால், முகம் பளபளவென்று இருக்கும். வறண்ட சருமத்திற்கு பாலில் கசகசாவை ஊறவைத்து மைய அரைத்து, 10 நிமிடம் பூசி பின் முகம் கழுவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பால் ஏடு, அல்லது உருளைக்கிழங்கு மைய அரைத்து, 10 நிமிடம் முகத்தில் தடவி பிறகு கழுவவேண்டும் சருமம் மென்மையாக இருக்கும்.