ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ‘இயலும் ஶ்ரீலங்கா’ உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் அரசியல் கட்சிகள் உட்பட 34 தரப்புகள் இணைந்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட உள்ளார். தமக்கான ஆதரவு தளத்தை உருவாக்கும் நோக்கில் ‘இயலும் ஶ்ரீலங்கா’ உடன்படிக்கையை ரணில் விக்ரமசிங்க உருவாக்கியுள்ளார் மேலும் இந்த உடன்படிக்கையில் இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு விடயங்களை அவர் உள்ளடக்கியுள்ளதுடன், இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் நிகழ்வு ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.