இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் – ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன.
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
உலக தெங்கு தினத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாகக் கொண்டு இந்த தெங்கு முக்கோண வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதலாவது தெங்கு முக்கோண வலயம் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.