Tamil News Channel

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை

Beautifully crafted traditional Indian gold jewellery for women. The ornaments are known as bangles worn to hands and made up of 22 carat gold.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (30) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

இதன் படி, இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான தங்கத்தின் விலைகளை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 190,150 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,770 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் இன்றைய விலை பவுணொன்றிற்கு 174,350 ரூபாவாகவும் ஒரு கிராமின் விலை 21,790 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,800 ரூபாவாகவும் பவுணொன்றின் விலை 166,400 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts