மீனவர்கள் கிளிநொச்சி – இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று இரண்டு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் நேற்றிரவு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



