Tamil News Channel

இரண்டு மாதங்களில் 341 உயிரிழப்புகள் பதிவு  

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 324 வாகன விபத்துக்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வாகன விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 1355 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்களினால் அதிகளவு உயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ளன.

வீதிக் கடவையை பாதசாரிகள் கடக்கும் போது, வீதிக் கடவையில் காலை வைத்தாலே அந்த காலை பாதசாரிக்கு சொந்தமானது என்பதனை வாகனம் செலுத்துவோர் கவனத்தில் கொண்டு பாதையை கடப்பதற்கு பாதசாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts