இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது.
சம்பத் வங்கி பிஎல்சீ மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி ஆகிய இரண்டு வங்கிகளுக்கே மத்திய வங்கி இவ்வாறு அபராதம் விதித்துள்ளது.
அதன்படி சம்பத் வங்கிக்கு இருபது இலட்சம் ரூபாயும், டிஎப்சிசி வங்கிக்கு பத்து இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நிதியியல் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்களின் விதிகள் ஆகியவற்றுடன் இணங்குவதற்கு தவறியமைக்காகவே டிஎப்சிசி வங்கிக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
Post Views: 2