February 11, 2026
இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சு மற்றும் வளர்ச்சியில் மந்தநிலையா?
Top Updates புதிய செய்திகள் மருத்துவம்

இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சு மற்றும் வளர்ச்சியில் மந்தநிலையா?

Apr 30, 2024

வயது குழந்தை சராசரியாக 20 வார்த்தைகளையாவது அர்த்தத்துடன் பேசத்தெரிந்திருக்க வேண்டும்  , மற்றும் சிறு வசனங்களை பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

பேச்சு மற்றும் பிற வளர்ச்சிப் படிநிலைகள் (Developmental milestones) ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு வேகமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருப்பதை அறிந்திருப்போம். ஆனால், இந்தத் தகவலில் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும்  இல்லை.

இதற்கு குறைவாகப் பேசினால், பேச்சுத்திறனில் குறைபாடு (speech delay) இருப்பதாக அர்த்தம். மேலும், இரண்டு வயதுள்ள குழந்தை, மாடிப்படிகளில் ஏறி, இறங்கும் அளவுக்கு நன்றாக நடக்கவும் ஆரம்பித்திருக்க வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை விரல்களால் ஒவ்வொன்றாகப் புரட்டத் தெரிந்திருக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடப் பழகியிருக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் உங்கள் குழந்தைகளிடம் இல்லையெனில் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி, காரணங்களைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *