கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட இராஜதந்திர நியமனங்கள் குறித்து விசாரணை நடத்த வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இராஜதந்திர நியமனங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விரிவான அறிக்கையை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக மீள அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய அவர், எவ்வாறாயினும் உடனடியாக மீள அழைப்பது கடினம் என்றும்அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.