November 13, 2025
இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல..!
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

இராஜினாமா செய்த கெஹெலிய ரம்புக்வெல்ல..!

Feb 7, 2024

சுற்றாடல் அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதனை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து (Immune Globulin) தடுப்பூசி கொள்வனவு தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ஆம் திககதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மேலும் அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய கெஹெலிய ரம்புக்வெல்ல அவர் கைது செய்யப்பட்டு மறுநாளான பெப்ரவரி 03ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *