November 13, 2025
இராணுவ உயர் அதிகாரி கைது.!
News News Line Top புதிய செய்திகள்

இராணுவ உயர் அதிகாரி கைது.!

Jan 10, 2024

மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தினால்  நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு இன்று(10) முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனது வரவைப் பதிவு செய்ய வேண்டும் மற்றும் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்திருந்தது.

கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாகவே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் விடுத்த உத்தரவை குறித்த இராணுவ அதிகாரி அவமதித்ததன் காரணமாக பிணை முறியை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்   நேற்றைய தினம் விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி திருச்செல்வம் ஜோசப் பிரபாகரன்   உத்தரவுட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *