January 23, 2026
இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த பெண்!!!
Updates புதிய செய்திகள்

இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த பெண்!!!

May 21, 2024

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி பெண்ணொருர் உயிரிழந்துள்ளதுடன் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாயும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த பெண்ணை மோதி விபத்துக்கு உள்ளானதில் பெண் உயிரிழந்திருந்துள்ளார்.

வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்பவரே தனது 23 ஆவது பிறந்தநாளான நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது .

அதேவேளை, குறித்த வாகனத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் , அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *