January 13, 2026
இராணுவ வீரர் மீது ஏறிய பாரஊர்தி…!
News News Line Top Updates புதிய செய்திகள்

இராணுவ வீரர் மீது ஏறிய பாரஊர்தி…!

Apr 26, 2024

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று(26)  காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளது.

இந்நிலையில் எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.

அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *