கொழும்பு பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர் சாலையில் நேற்று முன்தினம் காலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் பூத உடலுக்கு பலரும் செலுத்தி இறுதி அஞ்சலி வருகின்றனர்.
இந் நிலையில் அமேசன் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் அவர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்துள்ளார்.
அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…
இலங்கை அரசியலில் அனுபவரீதியான அரசியல்வாதி மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும் துணிந்து தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒருவராக அமரர் இரா.சம்பந்தன் இருந்திருந்ததாக நினைவு கூர்ந்தார்.
இலங்கை அரசியலிலும் தமிழ் மக்களின் அரசியலிலும் குறிப்பாக இரா சம்பந்தன் என்கின்ற பெயர் மிகவும் பிரபலமான தொன்று என்று குறிப்பிட்ட அவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் துணிந்து எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடிய திறமை கொண்ட ஒருவராக அவர் இருந்திருப்பதாக சுட்டி காட்டினார்.
அன்னாரது இழப்பு தமிழ் மக்களது அரசியலுக்கு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்ட அவர் அவரது இழப்பால் வேதனையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும் கலாநிதி இல்ஹமது மரைக்கார் குறிப்பிட்டார்.