அனுராதபுரம், மதவாச்சியில் இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
மதவாச்சி, ரம்பேவ, ரத்மல்கஹவெவ வீதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றுமொரு உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.