ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் அல்லைப்பிட்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபத்தில் பலரும் காயமடைந்துள்ள நிலையில் 8 பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.