அவிசாவளை – கொழும்பு வீதியில் பாதுக்க மாவத்தகம கொடிகஹகந்த மாவத்தைக்கு அருகில்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  பாதுக்க பொலிஸார் இன்று வியாழக்கிழமை (10.10) தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும்  பஹத்கமையில் இருந்து மீபே நோக்கி பயணித்துள்ளதுடன்,  அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதியும் சிறு காயங்களுடன் பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here