T20 உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்றிரவு (27.06)நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன.
போட்டியில் இந்தியா அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு சகல விக்காட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கட்டுக்களையும் 10 ஓட்டங்களையும் பெற்ற இந்திய வீரர் அக்ஷர் படேல் தெரிவாகியிருந்தார்.
இன்றைய நாள் (28.06) பர்படாசில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.