2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இன்று(27.06) ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இந்த தகுதியை பெற்றுள்ளது.
Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களையே பெற்றது.
அந்த அணி சார்பில் அனைத்து வீரர்களும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துள்ளனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Marco Jansen மற்றும் Tabraiz Shamsi தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
இதன்படி வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Reeza Hendricks 29 ஓட்டங்களையும், அணித் தலைவர் Aiden Markram 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர்.