நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் லீக் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் குஜராத் கியண்ட்ஸ் (Gujarat Giants) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.
குஜராத் அணி சார்பாக பாரதி ஃபுல்மாலி (Bharati Fulmali) 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் மின்னு மணி (Minnu Mani), மரிஷன் கப் (Marizanne Kapp) மற்றும் ஷிகா பாண்டே (Shikha Pandey) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை டெல்லி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி 13.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
டெல்லி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஷஃபாலி வர்மா (Shafali Varma) 71 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
குஜராத் அணிக்கு தனுஜா கன்வர் (Tanuja Kanvar) 2 விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக டெல்லி வீராங்கனை ஷஃபாலி வர்மா (Shafali Varma) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் நிலையில் உள்ள டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாளையதினம் நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதவுள்ளன.