Tamil News Channel

இறையாண்மைக்கு பாதகம்-எச்சரிக்கை விடுத்துள்ள விளாடிமிர் புடின்….

ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன.

அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரெய்னுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அண்மையில் தமது ஆயதங்களை போர் நடவடிக்கைகளுக்கு உக்ரெய்ன் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், அண்மையில் ரஷ்யா மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியது.

அந்த தாக்குதலுக்கு ஜெர்மனி நாட்டின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜெர்மனியின் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மேலைத்தேய நாடுகளை நீண்ட தொலைவுக்குச் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷ்யா வழங்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

உக்ரெய்ன் ஜெர்மனியின் ஆயுதங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை முன்வைத்த புடின், ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு நிறுத்தாமல், எங்களது நாட்டின் இறையாண்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தயார் எனவும் புடின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts