Tamil News Channel

2024ஆம் ஆண்டில் மோசமான சாதனை!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

நேற்று 17ஆம் திகதி இடம்பெற்ற 32ஆவது போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடல் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான சாதனையை பதிவு செய்தது.

குஜராத் சார்பாக ரஷீத் கான் (Rashid Khan) 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் அதிகபட்சமாக முகேஷ் குமார் (Mukesh Kumar) 3 விக்கட்டுக்களையும் இஷாண்ட் ஷர்மா (Ishant Sharma) மற்றும் த்ரிஷ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை டெல்லி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து 90 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி 8.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 92 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரேஷர் மெக்குர்க் (Jake Freser-McGurk) 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் (Sandeep Warrier) 2 விக்கட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி அணியின் தலைவர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து ஆறாவது நிலையில் உள்ளது.

இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் எட்டாவது மற்றும் ஒன்பதாவது நிலையில் உள்ள பஞ்சாப் கிங்க்ஸ் (Panjab Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts