14வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் 2024 மாலைதீவில் நடைபெற்றுள்ளது.
தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, உலக உடற்கட்டமைப்பு உடல் விளையாட்டு சம்மேளனம் மற்றும் ஆசிய உடற்கட்டமைப்பு உடல் விளையாட்டு சம்மேளனம் ஆகியவை இணைந்து இப்போட்டியை நடத்தியுள்ளது.
மேலும் இப்போட்டியில் இலங்கை அணி இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை சார்பாக பங்குபற்றிய புத்திக பிரசன்னா தடகள உடற்தகுதி 180 சென்ரிமீற்றர் பிரிவில் சிறப்பான பலம் மற்றும் உடலமைப்பை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
மேலும், சஹான் தில்ருக் விளையாட்டு உடலமைப்பு 180 சென்ரிமீற்றர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இதைத்தவிர, விஷ்வ தாருக விளையாட்டு உடலமைப்பு 175 சென்ரிமீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.