இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று(04) காலிமுகத்திடலில் நடைபெற்றது.
‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார்.
சுதந்திர தின விழாவைப் பல்வேறு கலை நிகழ்வுகளும் முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெற்றன.
மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 3461 பேரும், இலங்கைக் கடற்படையின் 1009 உறுப்பினர்களும் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்ட அணிவகுப்பில் இணைந்து கொண்டிருந்தனர்.
ஆயுதம் தாங்கிய வாகனங்கள் உள்ளிட்ட 69 வாகனங்களும், விமானப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 19 விமானங்களும் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொண்டன.
7 ஹெலிக்கொப்டர்கள், 16 ரக 5 விமானங்கள், 3 ஜெட் விமானங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
மேலும், இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழி உள்ளடங்களாக மும்மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.