இலங்கைக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் செனட் !
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை துணிச்சலுடன் தொடர்ந்ததற்காக, இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் செனட் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை ஒற்றுமை மற்றும் மீள்தன்மையின் சின்னமாக பாராட்டி, செனட் உறுப்பினர்கள் ஒருமனதாக ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினர்.
இலங்கையின் இந்த முடிவு, இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த நட்பையும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()