ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஜனவரி 11 மற்றும்12 ஆம் திகதிளில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் சுசுகி ஷுனிச்சி மற்றும் அவரது குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் நாடாளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.