2024 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான பணத்தினை புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டரீதியாக வங்கி முறையில் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 11.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.