January 13, 2026
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவுள்ள வேட்பாளர் யார்??
இலங்கை அரசியல் உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவுள்ள வேட்பாளர் யார்??

Aug 18, 2024

ஜனாதிபதித் தேர்தல்  வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னரே தாம் ஆதரவளிக்கவுள்ள வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

வவுனியாவில் இன்று (18) இடம்பெற்ற, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து  தெரிவித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் பா. சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் இரா.சாணக்கியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *