இலங்கையில் 2021 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யமான வர்த்தகரும் தொலைக்காட்சி பிரபலமுமான கொன்ஸ்டானிடோ உதவுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நவீன் அமித கமகே என்பவருக்கு இந்தக் கல்சொந்தமானது என்பதுடன், இதனை விற்பனை செய்துகொடுக்கும் பொறுப்பினை கொன்ஸ்டான்டியிடம் ஒப்படைத்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவின் அரசி என அழைக்கப்படும் இந்த இரத்தினக்கல் சுமார் 300 கிலோ கிராம் எடையுடைய மிகவும் அரிய வகை கல் ஆகும். குறித்த இரத்தினக்கல் சுமார் 250 மில்லியன்அமெரிக்க டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.