நேற்றைய தினம் (09.01.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் மகிந்த அமரவீர உரையாற்றும் போது இலங்கையிலிருந்து குரங்குகளை இறக்குமதி செய்வதில் சீனா இன்னும் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
”என்னுடைய சமீபத்திய சீன விஜயத்தின் போது அங்கிருந்த தனியார் மிருகக்காட்சி சாலைகள் இலங்கையிடம் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளது. சீனா முழுவதும் ஏறத்தாழ 20,000 மிருகக்காட்சி சாலைகள் காணப்படுவதோடு கண்காட்சிக்காக குரங்குகளை பயன்படுத்தும் நோக்கிலேயே சீன அரசாங்கம் குரங்குகளை இறக்குமதி செய்கின்றது. ஆனாலும், விலங்குப்பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளால் அரசாங்கத்திற்கு குரங்கு ஏற்றுமதிச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. மேலும், நாட்டில் ஒரு வருடத்தில் 700 மில்லியன் தேங்காய் உள்ளிட்ட பயிர்கள் குரங்குகளால் நாசமாகின்றன” என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.