December 14, 2025
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்…!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்…!

Aug 16, 2024

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 21ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக  இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்புப் பணிக்குழுவை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

இலங்கை விடயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ஆறு சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான யூனியனின் உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான ஜோசப் பொரெல் , ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர் என்பவரை இலங்கை தேர்தலுக்கான தலைமைப் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *