July 18, 2025
இலங்கையின் பணவீக்கத்தில் பாரிய மாற்றம்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

இலங்கையின் பணவீக்கத்தில் பாரிய மாற்றம்..!

Mar 29, 2024

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது.

கடந்த மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்த இலங்கையின் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாக குறைந்துள்ளது.

இருப்பினும், பெப்ரவரியில் 3.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு பொருள் அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் -0.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இந்த மாற்றமே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *