February 11, 2026
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..
புதிய செய்திகள்

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..

Jun 25, 2024

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7 சதவீதமாக காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 3.3 சதவீதமாக இருந்த நிலையில் அது மே 2024 இல் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது.

2024 ஏப்ரலில் 2.3 சதவீதமாக பதிவாகியிருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 2.4 சதவீதமாக சிறிதளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *