இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
“இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் @KingSalman மற்றும் HRH பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அரசியலமைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்” என்று சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.








