ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு உலக வங்கி குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர் கவனத்தை கோரும் அதே வேளையில், வளர்ச்சி, செழிப்பு மற்றும் அபிவிருத்திக்கான சாத்தியங்கள் கணிசமானதாகவே உள்ளது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ், இலங்கை தொடர்ந்தும் தனது பலத்தை கட்டியெழுப்பும் மற்றும் அதன் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் என உலக வங்கி குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், தேசத்தின் வளமான மற்றும் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் ஜனாதிபதி மற்றும் அவரது புதிய நிர்வாகத்திற்கு ஆதரவளிக்க உலக வங்கி குழு தனது தயார்நிலையையும் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here