குருணாகல் – மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவரை பரிசோதித்த போது கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.