அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிக வருமானம் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களை கண்காணிப்பதற்காக பெரிய வரி செலுத்துவோர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட உயர் நிகர மதிப்புள்ள தனிநபர் பிரிவுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.