நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (அக்டோபர் 23) இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு ரூ.15,000 வரை குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (அக்டோபர் 22) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.3,50,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அது ரூ.3,35,000 ஆக விற்பனையாகி வருகிறது.

தற்போதைய தங்க விலை நிலவரம் (23 அக்டோபர் 2025)படி:

24 கரட் தங்கம் (1 பவுண்) – ரூ. 3,35,000

22 கரட் தங்கம் (1 பவுண்) – ரூ. 3,07,000

24 கரட் தங்கம் (1 கிராம்) – ரூ. 41,875

22 கரட் தங்கம் (1 கிராம்) – ரூ. 38,375

நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தகவலின்படி, உலக தங்க சந்தை விலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இவ்வாறு விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here