November 13, 2025
இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்
News News Line Top புதிய செய்திகள்

இலங்கையில் புதிய விசா திட்டங்கள் அறிமுகம்

Jan 19, 2024

இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய விசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவி்த்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த டிஜிட்டல் விசா வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது .

முதலீட்டாளர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரையில் இலங்கையில் தங்கியிருப்பதற்காக விசா வழங்கப்பட உள்ளதுடன் இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர விசா வழங்கப்பட உள்ளது.

மேலும் சுற்றுலா விசா நடைமுறைகளை இலகுபடுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து வடக்கு மக்கள் விசா பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் நோக்கில் வவுனியாவில் பெப்ரவரி மாதம் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *