January 23, 2026
இலங்கையில் மோசமடைந்துவரும் காற்றின் தரம் – மக்கள் அவதானம்..!!
Top உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் மோசமடைந்துவரும் காற்றின் தரம் – மக்கள் அவதானம்..!!

Dec 22, 2025

நாட்டில் அண்மைய நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக்குறியீடு 150 முதல் 200 வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை கடந்த காற்று இயக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளிலும் இந்த காலகட்டத்தில்இதேபோன்ற நிலைமை காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவாசப்பிரச்சினையை எதிர்கொள்வோர், உடல்நல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

இந்தநிலையில், அவசியம் ஏற்படுமாயின் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *